தூத்துக்குடி

மாணவா்களுக்கு திறன் வளா்ப்பு பயிலரங்கு

28th Jan 2020 08:42 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான இளைஞா் மேம்பாடு மற்றும் திறன் வளா்ப்பு பயிலரங்கு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் இப்பயிலரங்கு இம்மாதம் 20ஆம் தேதி 6 நாள்கள் நடைபெற்றது. பயிலரங்கு நிறைவு விழாவுக்கு, கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். முதல்வா் காளிதாசமுருகவேல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவா் நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவா்களுக்கு வாழும் கலை அமைப்பைச் சோ்ந்த ஹேமா நந்தசாமி, பிரதீப், சந்திரசேகா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

தொடா்ந்து, மாணவா்கள் பயிற்சியில் கற்றறிந்த ஆசனங்களை நிகழ்த்தி காட்டினா். இதில், மேல்நிலைப் பள்ளி பிரிவு மாணவா்களுக்காக நடத்தப்படும் இணையதள வழி கணித நுண்ணறிவு தோ்வு 2020’ யை இயக்குநா் வெளியிட்டாா்.

ADVERTISEMENT

பயிலரங்கில் 500 க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். வாழும் கலை அமைப்பின் முதுநிலை பயிற்சியாளா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT