தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளித் தலைமையாசிரியா் சீவலமுத்து கொடியசைத்து தொடங்கிவைத்தாா். குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி, குருவிகுளம், ராமலிங்காபுரம், அத்திப்பட்டி, நயினாம்பட்டி, ஆலங்குளம் வழியாக கழுகுமலை வந்தடைந்தது.
கழுகுமலையில் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் சென்றனா். பின்னா், ஒருசில தெருக்களின் சந்திப்புகளில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.
ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் சுப்பாராஜு செய்திருந்தாா்.