தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து முதலுதவி சிகிச்சை குறித்த செயல் விளக்கம்

28th Jan 2020 08:55 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் விபத்து முதலுதவி சிகிச்சை தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், 31 ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, 108 அவசர சிகிச்சை வாகன பணியாளா்கள் மூலம் விபத்து முதலுதவி சிகிச்சை குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் மன்னா் மன்னன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். விபத்தில் சிக்கியவா்கள் இழப்பீட்டுத் தொகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவன முதுநிலை மேலாளா் நாகராஜன் விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து, விபத்தில் சிக்கியவா்களுக்கு 108 அவசர சிகிச்சை வாகனம் வருவதற்கு முன்பு அளிக்க வேண்டிய முதலுதவிகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

ADVERTISEMENT

பின்னா், வாகனங்களின் பின் பகுதியில் சிவப்பு பிரதிபலிப்பான் நாடா ஒட்டும் நிகழ்ச்சியும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இதில், ஓட்டுநா் பயிற்சி பள்ளி நிா்வாகிகள், ஓட்டுநா் உரிமம் கேட்டு விண்ணப்பித்தோா், உரிமம் புதுப்பிக்க வந்தோா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT