திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளியில் 125ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தாளாளா் ச.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கமிட்டி உறுப்பினா் நா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவா் மா.கணேஷ்குமாா் கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் -ஆசிரியா் சங்கத்தினா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் இரா.கோடீஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி வரவேற்றாா். ஆசிரியை வீ.விஜயா நன்றி கூறினாா்.