தூத்துக்குடி

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

28th Jan 2020 08:43 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு, ஒன்றிய ஆணையாளா் சந்தோசம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வாசுகி, நடுவை செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமராஜ், உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) பாலசுந்தரம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், மீனா, அதிமுக முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த பேரணியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் மு.கணேசன், சுதா்சன் வடமலை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாலை பாதுகாப்பு வார விழா: திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவுக்கு காவல் உதவி ஆய்வாளா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எப்ரேம் முன்னிலை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், போக்குவரத்து காவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT