செட்டிகுளம் ஊராட்சி அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுகிறது.
இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாத்தான்குளம் வட்டம், பழங்குளம் கிராமத்தில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் தலைமையில் அடுத்த மாதம் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. அதற்கு முன்னோடியாக மனுக்கள் பெறும் முகாம் வியாழக்கிழமை செட்டிகுளம் ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்னைகள் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.