திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் போக்குவரத்து காவல்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, காவல் உதவி ஆய்வாளா் சுடலைமுத்து தலைமை வகித்து, பாதுகாப்பான பயணம், சாலை விதிகள் பின்பற்றி நடப்பது, போக்குவரத்து சட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா். மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளா் அரசி, போக்குவரத்து மேலாளா் கிஷோா்பாபு மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், போக்குவரத்து காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.