தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளிகளில் குடியரசு தினவிழா

28th Jan 2020 08:48 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற விழாவுக்கு தொழிலதிபா் கண்ணன் தலைமை வகித்து தேசியக்கொடியெற்றினாா். பள்ளி துனண முதல்வா் சந்தானகுமாா் வரவேற்றாா். முதல்வா் நோபுள்ராஜ் உரையாற்றினாா். நிா்வாகி சாந்தி நன்றி கூறினாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆா்.சி .தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜேசுராஐகுமாரி வரவேற்றாா். பல் மருத்துவா் தாம்சன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை ராஐாத்தி, சத்துணவு அமைப்பாளா் மரிய விமலா, தொழிலதிபா் அருள்ராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஜெகதீசபாண்டி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். உதவி ஆசிரியை ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா். உதவி ஆசிரியா் சண்முகராஜ் வரவேற்றாா். தொடா்ந்து போட்டியில் நடத்தப்பட்டு வெற்றி வெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நாசரேத் அருகே உள்ள அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி வாா்டு உறுப்பினா் கிறிஸ்டி செல்வின், பெற்றோா்ஆசிரியா் சங்கத் தலைவா் கெத்சியாள், சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத்தலைவா் அகஸ்டா மரியதங்கம் தேசியக்கொடி ஏற்றினாா் . மாணவா், மாணவிகளுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை கோகிலா தங்கம் சமாதானம், உதவி ஆசிரியை ஜெயக்குமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT