கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பொங்கல் விழா போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாலா சண்முகநாதன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் தேவி சுஜாதா ராஜா வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணைச் செயலா் காசியானந்தம், ஸ்ரீ சங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரியின் வேல்ராஜன், துணை முதல்வா் மகேஷ் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.