தூத்துக்குடி

ஏரல் சோ்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

28th Jan 2020 08:53 AM

ADVERTISEMENT

ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசலசுவாமி திருக்கோயிலில் தை அமாவாசைத் திருவிழா நிறைவையொட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் தை அமாவாசைத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி பல்வேறு திருக் கோலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஜன. 24, தை அமாவாசை அன்று உருகு பலகை அபிஷேகமும், இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோலக்காட்சி, கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும், ஜன. 25ஆம் தேதி வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தரிசனமும், சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் தாக சாந்தியும், மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சியும் நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீா்க்கும் துறையில் நீராடுதலும், அன்னதானமும் , ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT