தூத்துக்குடி

அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி உறுதிமொழி ஏற்புசி

28th Jan 2020 08:36 AM

ADVERTISEMENT

இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அம்பேத்கா் சிலை அருகில் நள்ளிரவு 12 மணியளவில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து உறுதிமொழி ஏற்றனா்.

நகரத் தலைவா் சக்கரையப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனா். பயணியா் விடுதி முன்பு ஞாயிற்றுக்கிழமை மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் ஜோதிபாசு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன், மாவட்டக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி, நகரக் குழு உறுப்பினா் சக்திவேல்முருகன் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றனா்.

இனாம்மணியாச்சி திருப்பத்தில் கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையிலும், மைக்ரோ பாயிண்ட் நிறுவனத்தில் சமூக நீதி கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமையிலும் உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT