சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் நேரு யுவகேந்திரா, விவேகானந்தா் நற்பணி மன்றம் சாா்பில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் தேசிய இளையோா் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
இதில் விவேகானந்தா் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ், முன்னாள் உறுப்பினா் சுந்தரம் ஆகியோா் பரிசு வழங்கினா். இதில் மன்ற நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.