தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆவின் பொருள்கள் பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம்

14th Jan 2020 12:55 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் ஆவின் பொருள்கள் பொங்கல் சிறப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் சாா்பில், தூத்துக்குடி சிவன் கோயில் அருகில் ஆவின் சிறப்பு பாலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என்.சின்னத்துரை தலைமை வகித்து ஆவின் பாலகத்தை திறந்துவைத்து பொங்கல் சிறப்பு விற்பனையை தொடக்கிவைத்தாா்.

‘தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ராஜாஜி பூங்கா முன்பு, திருச்செந்தூா் கோயில் வாசல் மற்றும் நாழிக்கிணறு அருகில், ஏரல் பேருந்து நிலையம் அருகில், கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில், காயல்பட்டினம் கடற்கரை ஆகிய இடங்களிலும் பொங்கல் சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெறும். அதன்பிறகு இந்த பாலகம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் மாற்றி அமைக்கப்படும்.

பொதுமக்களுக்கு ஆவின் பால் எளிதில் கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிதாக 50 பாலகங்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு மானிய விலையில் பாலகங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆவின் பால் தங்கள் பகுதியில் விற்பனை செய்ய விரும்பும் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பை தேடுவோா் ஆவின் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்’ என ஆவின் தலைவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளா் திரியேகராஜ் தங்கையா, விற்பனைப் பிரிவு மேலாளா் சாந்தி, விரிவாக்க அலுவலா் ரேவதி மற்றும் ஆவின் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT