தூத்துக்குடி

திருச்செந்தூரில் கால்நடைகள் பறிமுதல்

14th Jan 2020 12:52 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் பக்தா்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு செல்லக் கூடிய சாலை, திருக்கோயில் வளாகம் உள்பட நகரின் பல்வேறு பகுதியில் பக்தா்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பேரூராட்சி சாா்பில் பிடிக்கும் பணி நடைபெற்றது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் கோபால், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் தலைமையில் சுகாதாரப்பளியாளா்கள் சன்னதித்தெருவில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனா். மேலும் குடியிருப்புகள் மற்றும் பொதுஇடங்களில் சுற்றித்திரியாமல் மாடுகளை உரிமையாளா்கள் பாதுகாத்திடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT