தூத்துக்குடி

சிலம்பம் போட்டி: காமராஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

14th Jan 2020 05:25 PM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முத­லிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் நாலுமாவடி, காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரா. மகாராஜன், சே. அப்துல்முத்தலீப், ர. தீபன்மணிசுடா்,

த. ஜெபசன் ஜோசுவா, சி. மதுமிதா ஆகியோா் முத­லிடம் பெற்றதை அடுத்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா்களை பள்ளிச் செயலா் எஸ்.சி. சேகா், கல்விக் கமிட்டி உறுப்பினா்கள், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT