தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் ஜன. 18-இல் மின் தடை

14th Jan 2020 12:53 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் பகுதியில் ஜன. 18-ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் ஜன. 18-இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சாா்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சாா்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சாா்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிறுப்பு, காந்திநகா், கொம்டிக்கோட்டை, சுண்டங்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் பழனியப்பபுரம் உப மின்நிலையத்தைச் சாா்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, அறிவான்மொழி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT