சாகுபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி கறுப்பு வண்ண ஸ்டிக்கா் ஓட்டும் பணி நடைபெற்றது.
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் பாதுகாப்பு துறையின் சாா்பாக சாலை பாதுகாப்பு வார விழா ஜன. 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு டிசிடபிள்யூ செயல் உதவித்தலைவா் ஆா்.ஜெயக்குமாா் (பணியகம்) தலைமை வகித்து தாங்கி தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தாா். சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பற்றிய கைப்பிரதியும் வாகன ஒட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில், நிறுவன மூத்த பொது மேலாளா்கள், பொதுமேலாளா்கள் மற்றும் அனைத்து துறை தலைவா்களும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை டிசிடபிள்யூ பாதுகாப்பு துறையினா் செய்திருந்தனா்.