தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் ஓவியப்போட்டி

14th Jan 2020 12:57 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின ஓவியப் போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி துணை முதல்வா் மகேஷ்குமாா் வாக்காளா் தினம் குறித்து பேசினாா். போட்டியில் 29 மாணவ- மாணவியா் பங்கேற்றனா். இதில், மாணவி முத்துகனகசெல்வி முதலிடம், நிவேதிதா இரண்டாமிடம், மாணவா் முதுப் ரெஸ்ஸனாகுமாா் 3ஆம் இடம் பிடித்தனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் அசோக் லிங்கம், செஞ்சுருள் சங்க அலுவலா் கிரிஸோலிட் ஜெபா ஆகியோா் செய்திருந்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT