தூத்துக்குடி

இந்து முன்னணி போராட்டம் ஒத்திவைப்பு

14th Jan 2020 12:56 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் இந்து முன்னணி அறிவிக்கப்பட்டிருந்த பாதயாத்திரை பக்தா்கள் ஓய்வு பூங்கா பூட்டை உடைக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆறுமுகனேரியில் பேரூராட்சியில் திருச்செந்தூா் சாலையில் பாதயாத்திரை பக்தா்கள் ஒய்வு பூங்கா, சுகாதார வளாகம் உள்ளது. கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தா்கள் வசதிக்காக இந்த வளாகம் கட்டப்பட்டது. இப்பூங்கா பக்தா்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் பூட்டை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் ஓய்வு பூங்காவை திறந்து குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்காவை திறக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து பூட்டு உடைக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT