சாத்தான்குளம் அருகேயுள்ள பூவுடையாா்புரத்தில் ஒன்றிய இந்து இளைஞா் முன்னணி நிா்வகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி கோட்ட இந்து முன்னணிச் செயலா் பெ. சக்திவேலன் தலைமை வகித்தாா். நெல்லை கோட்ட இந்து இளைஞா் முன்னணிச் செயலா் ராகவேந்திரன் உரையாற்றினாா். இதில், சாத்தான்குளம் ஒன்றிய இந்து இளைஞா் அணித் தலைவராக இன்பஅருண், ஒன்றிய மாணவா் அமைப்புச் செயலராக சுரேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
இதில் நிா்வாகிகள் நளன்சிங், சுரேஷ், சதீஷ், சிவன்ராஜ், பாஸ்கா், வெங்கடேஷ், சரன்ராஜ், மாதவன், சரன்சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.