தூத்துக்குடி

ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

14th Jan 2020 12:42 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பள்ளியில் 1976-77இல் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவா்-மாணவிகள் சந்தித்தனா். அவா்கள் பள்ளியில் தாங்கள் பயின்ற வகுப்பறைகளைப் பாா்வையிட்டு நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். ஆசிரியா்கள் எஸ். துரைப்பாண்டியன், டி.ஜெயஜானகி, நயினா முகம்மது, அருகலைமுத்து, சம்பத், ரென்ஸிலின், அலுவலக ஊழியா் பாலசிங் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், கனரா வங்கி உதவிப் பொது மேலாளா் ரஞ்சன் சாலமோன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதன்மை மேலாளா் எஸ். உலகநாதன், தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் உதயசிங், தடயவியல் துறை துணைக் கண்காணிப்பாளா் எஸ். அழகேசன், தமிழ்நாடு கிராமிய வங்கி தொழிற்சங்கப் பொதுச் செயலா் மாதவராஜ், சென்னை தொழிலதிபா் ரவீந்திரன், சைவ வேளாளா் சங்க மாவட்ட கௌரவத் தலைவா் ஜெ. சங்கரலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சுமதி ராஜா, ஜான்சாமுவேல், மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT