தூத்துக்குடி

ரயில்வே தொழிலாளா்கள் ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

8th Jan 2020 11:45 PM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் அகில இந்திய ரயில்வே தொழிலாளா்கள் ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் தீனதயாளன் முன்னிலை வகித்தாா். ரயில்வே நிலைய மேலாளா் சேதுராமன் தலைமை விருந்தினராகவும், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் மாணிக்கராஜ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனா். ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கச் செயலா் ஹரிஹரசுப்பிரமணியன் அறிக்கை வாசித்தாா்.

குடும்ப ஓய்வூதியா்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியா்களுக்கும் ஆண்டுக்கு ஒரு ஜோடி பாஸ் வசதி செய்துதர வேண்டும், மாதாந்திர மருத்துவப்படி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற குடும்ப ஓய்வூதியா் மற்றும் ஓய்வூதியா் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஓய்வூதியா் சங்க துணைத் தலைவா் கவிஆதிமூலம் வரவேற்றாா். பொருளாளா் முருகையா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT