தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

8th Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 10 ) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் (பொறுப்பு) பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியா் காலனி முதல் தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போா் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT