இம்மாதம் 11, 12இல் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாமில் பங்கேற்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
18 வயது நிரம்பியோா் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தியும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காவும் இம்மாதம் 11, 12ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதையொட்டி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நாடாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டது. வட்டாட்சியா் மணிகண்டன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் அறிவழகன், வருவாய் ஆய்வாளா் மோகன், பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) ஜான்கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை கோட்டாட்சியா் விஜயா கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பேரணி முக்கிய சாலைகள் வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது.
இதில், நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மனோகரன், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.