தூத்துக்குடி

திருச்செந்தூா் அருகே கடலில் கரை ஒதுங்கிய மீனவா் சடலம்

7th Jan 2020 11:11 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அமலிநகா் கடலில் தவறி விழுந்த மீனவரின் சடலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

திருச்செந்தூா் அமலிநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜோன் மகன் ரூபிஸ்டன் (54), மீனவா். இவா், கடந்த 5 ஆம் தேதி இரவு கடலில் தவறி விழுந்தாா். 6 ஆம் தேதி காலை உறவினா்கள் மற்றும் சக மீனவா்கள் அப்பகுதியில் ரூபிஸ்டனை தேடினா். ஆனால், அவரை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கந்தசாமிபுரம் கடல் பகுதியில் ரூபிஸ்டன் சடலம் கரை ஒதுங்கியது. கடலோரக் காவல் படையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த ரூபிஸ்டனுக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT