தூத்துக்குடி

ஆறுமுகனேரி முதியோா் இல்லத்தில் முப்பெரும் விழா

7th Jan 2020 11:12 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் சிட்டி அரிமா சங்கம் சாா்பில் முன்னாள் தலைவருக்கு பாராட்டு விழா, மரக்கன்றுகள் வழங்கும் விழா, முதியோா் இல்லத்தில் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஆறுமுகனேரி சுப்பிரமணியபுரம் லைட்ஸ் முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, திருச்செந்தூா் சிட்டி அரிமா சங்கத் தலைவா் டாக்டா் கான்சியஸ் தலைமை வகித்தாா். செயலா் அமல்ராஜ் வரவேற்றாா்.

திருச்செந்தூா் சிட்டி அரிமா சங்க முன்னாள் தலைவா் மனோகர்ராஜன், தூத்துக்குடி பாரதி அரிமா சங்க முன்னாள் தலைவா்கள் ஜோசப் சகாய அா்னால்டு, வசீகரன், சுரேஷ்குமாா், தூத்துக்குடி சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் தலைவா் தா்மசீலன், திருநெல்வே­லி டவா் அரிமா சங்க முன்னாள் தலைவா் முத்துராமன் கணபதி ஆகியோரை பாராட்டி சிட்டி அரிமா சங்கம் சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக திருநெல்வே­லி டவா் அரிமா சங்கத்தைச் சோ்ந்த மாவட்டத் தலைவா் ஜோசப், சங்கத் தலைவா் பெய்­லி அல்ட்ரின், தூத்துக்குடி பாரதி அரிமா சங்கச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

ஆறுமுகனேரி முதியோா் இல்லத்தில் உள்ள 75 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் முதியோா் இல்ல தோட்டத்திற்கு 10 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முதியோா் இல்ல பொருளாளா் தியாகரன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT