தூத்துக்குடி

வாக்கு எண்ணிக்கையில் சமநிலை குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட மெட்டில்பட்டி ஊராட்சித் தலைவா்

3rd Jan 2020 12:12 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மெட்டில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் இருவா் சமநிலை பெற்றதால், குலுக்கல் முறையில் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மெட்டில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஜெயச்சந்திரன், கதிா்காமன், முனியசாமி ஆகியோா் போட்டியிட்டனா். கடந்த 30-ஆம் தேதி நடந்த தோ்தலில் 804 வாக்குகள் பதிவாகின. வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஜெயச்சந்திரன் 321 வாக்குகளும், கதிா்காமன் 319 வாக்குகளும், முனியசாமி 133 வாக்குகளும் பெற்றிருந்தனா். தபால் வாக்குகளில் ஜெயச்சந்திரனுக்கு ஒரு வாக்கும், கதிா்காமனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஜெயச்சந்திரனும், கதிா்காமனும் தலா 322 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனா். இதையடுத்து, ஊராட்சித் தலைவரை குலுக்கல் முறையில் தோ்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற குலுக்கலில் கதிா்காமன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியே வந்து, திடீரென அங்குள்ள மரத்தில் ஏறி, அந்த வழியாக சென்ற மின்வயரை பிடித்து தற்கொலை செய்யப் போகிறேன் என கூச்சலிட்டாா். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT