தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்பிக் தொழிற்சாலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை

3rd Jan 2020 12:17 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை அண்மையில் நடைபெற்றது.

தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநரான ரவிக்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், அமோனியா பிரிவில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது என செய்து பாா்க்கப்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகையை அவசரகால கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி ஸ்பிக் நிறுவன தொழிற்சாலைப் பொதுமேலாளா் செந்தில்நாயகம் பாா்வையிட்டு, வாயுக் கசிவைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதவிப் பொதுமேலாளா் ராஜேஷ்குமாா், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை மேலாளா் ரவிச்சந்திரன், ஸ்பிக் நிறுவன தீயணைப்புத் துறையினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கிரீன் ஸ்டாா் நிறுவனம்: இதேபோல, தூத்துக்குடி துறைமுகம் அருகேயுள்ள கிரீன்ஸ்டாா் அமோனியா சேமிப்புக் கலன் தொழிற்சாலையிலும் அவசரகால ஆயத்த ஒத்திகை, தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரவிக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது.

தொடா்ந்து, சுற்றுச்சூழல் மாசு சரிபாா்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதில், ஸ்பிக் மற்றும் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழக பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை வீரா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT