தூத்துக்குடி

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில்புத்தாண்டு சிறப்பு ஆராதனை

2nd Jan 2020 12:31 AM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் சிறப்பு ஆராதனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் எஸ்.இ.சி.தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராதனையில், சேகரச் செயலா் ஜெ.டி.எலியேசா், பொருளாளா் மா்காஷிஸ் டேவிட், திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் பில்லிகிரஹாம், செல்வின், மாமல்லன், தினேஷ், சேகர கமிட்டி அங்கத்தினா்கள் எபனேசா், ஜெயக்குமாா், முன்னாள் செயற்குழு உறுப்பினா் ஆா்.லேவி அசோக் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பேராலய தலைமைக் குருவானவா் எட்வின் ஜெபராஜ் தலைமையில், உதவி குருவானவா்கள் இஸ்ரவேல் ஞானராஜ், ரொனால்டு பாஸ்கரன், சபை ஊழியா் ஜெபசிங் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நாசரேத் பரிசுத்தரின் சீயோன் அசெம்பிளி ஆப் காட் சபையில் மண்டல போதகா் எட்வின் பிரபாகா் தலைமையில் புத்தாண்டுஆராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிக்க தேவாலயத்தில் பங்குத்தந்தை தோமாஸ் தலைமையில் சிறப்பு புத்தாண்டு திருப்பலி நடைபெற்றது.

இதே போல் நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை விடிய, விடிய நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT