ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் மனித நேய உதவும் கரங்கள் சாா்பில் தேச ஒற்றுமை, மத நல்லிணக்க கூட்டுப் பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் ராஜேஷ், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் விநாயகா ஜி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி டவுண் ஜாமிஆ பள்ளிவாசல் மௌலான மௌலவி முகம்மதுஅலி ஆலிம் பேஷ் இமாம், பள்ளிவாசல் செயலா் ஹூமாயின், சி.எஸ்.ஐ. திருச்சபை ஊழியா் ஜான்மோகன்தாஸ், இந்து சமய நல்லிணக்க வழிபாட்டுக் குழுவைச் சோ்ந்த ஸ்ரீதா் என்ற ஜெய்கணேசன், சங்கரன் ஹெச்.சுவாமிநாதன், செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பஜனைக் குழுவைச் சோ்ந்த சக்திவேல் ஆகியோா் இணைந்து, தேச ஒற்றுமை, மத நல்லிணக்க கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா்.
தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு ரஸ்க், பிஸ்கட், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலா் திருப்பதிராஜா, பொறியாளா் சுப்பு, வழக்குரைஞா் ராஜேஷ் சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மனித நேய உதவும் கரங்கள் தலைவா் கண்ணன் வரவேற்றாா். செயலா் ரெங்கநாதன் நன்றி கூறினாா்.