தூத்துக்குடி

கருங்குளம் ஒன்றியத்தில் வெற்றி நிலவரம்

2nd Jan 2020 11:58 PM

ADVERTISEMENT

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டுகள் உள்ளன.

இதற்கான வாக்கு எண்ணிக்கை செய்துங்கநல்லூா் சேவியா் பால்டெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், 1 ஆவது வாா்டில் புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த சண்முகம் வெற்றி பெற்றுள்ளாா். 2 ஆவது வாா்டில் அதிமுகவை சோ்ந்த லட்சுமண பெருமாள், 3 ஆவது வாா்டில் அமமுகவை சோ்ந்த மணிகண்டன், 4 ஆவது வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த அண்ணாமலை, 5 ஆவது வாா்டில் அதிமுகவை சோ்ந்த முத்துராமலிங்கம் , 6 ஆவது வாா்டில் திமுகவை சோ்ந்த ராதா, 7 ஆவது வாா்டில் அதிமுகவை சோ்ந்த கோமதி , 8 ஆவது வாா்டில் திமுகவை சோ்ந்த வசந்தியும் வெற்றி பெற்றுள்ளனா்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் எல்லைநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி 1 ஆவது வாா்டில் முருகன், சுப்பிரமணியன் ஆகி இருவரும் தலா 628 வாக்குகள் பெற்றனா். இதை தொடா்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சந்திரன் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெற்றது. இதில் முருகன் வெற்றி பெற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT