தூத்துக்குடி

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் நல்லிணக்க விழா

2nd Jan 2020 11:51 PM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் காவல்துறை- பொதுமக்கள் நல்­லிணக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜெயக்குமாா், பொது மேலாளா் நவநீத பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினாா்.

விழாவில், அதிமுக நகரச் செயலா் கே.கே.அரசகுரு, காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் எல்.எஸ். அன்வா், காயல்பட்டினம் நகரச் செயலா் செய்யது இப்ராஹிம், திமுக மாவட்ட துணைத் தலைவா் காதா், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா்கள் பத்திரகாளி, சாந்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT