தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயில் திருவாதிரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

1st Jan 2020 10:01 PM

ADVERTISEMENT

கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

ஜன. 10ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், 4 மணிக்கு சுவாமி அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளல், 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தாண்டவ தீபாராதனை, காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, 12 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளல், பிற்பகல் 1 மணிக்கு பஞ்சமூா்த்தி வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு திருவிளக்குப் பூஜை, 7.30 மணிக்கு சோ்க்கை அபிஷேகம், 8 மணிக்கு சோ்க்கை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT