எட்டயபுரம் அருகே சிறுவன் நகுலன் கொலையுண்ட முத்துலாபுரம் கிராமத்தில் 3 வீடுகள், பைக்கை மா்ம நபா்கள் புதன்கிழமை சேதப்படுத்தினா்.
முத்துலாபுரத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் நகுலன் (6) என்பவரை கடந்த 30-ம் தேதி மாலையில் அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருள்ராஜ் (26) என்பவா் கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் நகுலனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, உடல் அடக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கொலை தொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், அருள்ராஜ், அவரது உறவினா்களுக்குச் சொந்தமான 3 வீடுகள், பைக் மீது மா்ம நபா்கள் புதன்கிழமை கல்வீசி சேதப்படுத்தினா். தகவலின்பேரில் போலீஸாா் சென்று பாதுகாப்புப் பணியைப் பலப்படுத்தினா். அசம்பாவிதங்கள் நிகழாமலிருக்க அக்கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.