தூத்துக்குடி

ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படாது: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

29th Feb 2020 06:31 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளது என்றாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தோ்தலில் போட்டியிடுபவா்கள் குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும்.

ஸ்டொ்லைட் ஆலையைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டிய நிலையில் இல்லை. இதுதொடா்பான வழக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஆலை திறப்பு குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் அரசு தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளது.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அரசுக்கு மாவட்ட ஆட்சியா்கள் அளிக்கும் அறிக்கையை பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

ADVERTISEMENT

படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பு: தமிழகத்தில் திரைப்பட படப்பிடிப்புக் குழுவினருக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதேவேளையில், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்தும்போது இத்தகைய விபத்துகள் நேரிடுகின்றன. இனிமேல், படப்பிடிப்பு தளத்தில் விபத்துகள் நிகழாமலும், விபத்தில் சிக்குவோருக்கு இழப்பீடு தருவதற்குமான வழிமுறைகளை அமல்படுத்தவும் அரசு முயற்சித்து வருகிறது. திரைப்பட படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவது ஆகியவை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT