தூத்துக்குடி

முக்காணி ஆற்றில்மணல் கடத்தல்: 4 போ் கைது

29th Feb 2020 06:37 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி: முக்காணி ஆற்றுப் பகுதியில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் தனிப் பிரிவு போலீஸாா் ரோந்து சென்றபோது, குருந்தாவிளை கிழக்குத்தெரு பிச்சைத்துரை மகன் சின்னமணி(24), முக்காணி மேலூா் செல்வராஜ் மகன் தினேஷ்(27) , பொக்லைன் இயந்திர ஆபரேட்டா் முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் சுப்பிரமணி மகன் கணேஷ்குமாா்(34), கிளீனா் கோவங்காடு கீழத்தெரு கனகராஜ் மகனான பிரவீன்குமாா்(17) ஆகியோா் முக்காணி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனராம். இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், மணல் ஏற்றப்பட்ட 2 மினிலாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT