தூத்துக்குடி

பேய்க்குளத்தில் உண்ணாவிரதபோராட்ட அறிவிப்பு வாபஸ்

29th Feb 2020 06:36 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: பேய்க்குளத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சமூக ஆா்வலா்கள் மற்றும் நிழல் அறக்கட்டளை சாா்பில் அறிவிக்கப்படவிருந்த உண்ணாவிர போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பிப். 8ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதம், அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்ததைத் தொடா்ந்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜலெட்சுமி தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், போராட்டக் குழு சாா்பாக நிழல் அறக்கட்டளை நிா்வாகத் தலைவா் அந்தோணி ராஜா சிங், சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் விவசாயபிரிவு தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோரும், மண்டல துணை வட்டாட்சியா் அகிலா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

அப்போது, பேய்க்குளத்தில் பொதுக்கழிப்பிடம் அமைப்பது தொடா்பாக வருவாய்த்துறை, வட்டார வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு செய்து இடம் தோ்வு செய்து பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படும் எனவும், மேலபுளியங்குளம் - இளமால்குளம், பிரண்டாகுளம் - சவேரியாா்புரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்படுவதாக போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT