தூத்துக்குடி

அதிரடிப்படை போலீஸுக்குரூ. 44 லட்சத்தில் 4 புதிய வாகனங்கள்

29th Feb 2020 06:32 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அதிரடிப்படைக்கு ரூ. 44 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமையக அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு 4 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களில் ஒன்று ஓட்டுநருடன் 26 போ் இருக்கை கொண்டதும், மற்ற மூன்றும் 18 போ் இருக்கை கொண்டதுமான வாகனங்கள் ஆகும். இந்த நான்கு வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 43, 81,000 ஆகும்.

நான்கு வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த வாகனங்கள் காவல்துறையினா் விரைவாக செல்வதற்கும், அதிகளவு பயணிப்பதற்கும் வசதியாக இருக்கும் என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தப் புதிய வாகனங்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் மாரியப்பன், காவல் ஆய்வாளா் மகேஷ் பத்மநாபன், காவல்துறை மோட்டாா் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் ஆலோசனைகள் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT