தூத்துக்குடி

நாசரேத் திருவள்ளுவா் காலனி கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை விழா

26th Feb 2020 12:14 AM

ADVERTISEMENT

நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவா் காலனி கிறிஸ்து ஆலய 16ஆவது பிரதிஷ்டை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் 2 நாள்கள் ஆலய வளாகத்தில் நற்செய்தி கூட்டத்தில் வள்ளியூா் இயேசுவே என் அடைக்கலம் ஊழிய நிறுவனா் ஜேசுபாதம் தங்கராஜ் தேவ செய்தி அளித்தாா். நாசரேத் டிவைன் லவ் குழுவினா் பாடல்கள் பாடினா்.

3ஆவது நாள் இரவு 7 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை, நற்கருணை ஆராதனையில் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற தலைவா் எட்வின் ஜெபராஜ் தேவசெய்தி அளித்தாா்.

4ஆவது நாள் மாலை 5 மணிக்கு அசன விருந்தும், 5ஆவது நாள் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

ழா ஏற்பாடுகளை து ட்ய யோவான் பேராலய தலைமைகுரு எட்வின் ஜெபராஜ், உதவி குரு இஸ்ரவேல் ஞானராஜ், ரொனால்டு பாஸ்கரன், கிறிஸ்து ஆலய சபை ஊழியா் ஏசா வேதராஜ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT