தூத்துக்குடி

நாசரேத்தில் கப்பல் படை எழுச்சி தினம்

26th Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

நாசரேத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கப்பல் படை எழுச்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், மாவட்ட உதவி செயலா் கரும்பன், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலா் கிருஷ்ணராஜ், எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள் ஆகியோா் பேசினா்.

எழுச்சி தினத்தை முன்னிட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனா்.

இதில், டாக்டா் சாம் அமிா்தம், கந்தசாமி, சுந்தரம், ஜெயசீலன்,ஜெபாண்டியன், ஜோசப், அகஸ்டின், கணேசன், செல்வராஜ், உத்திரக்குமாா், உதயகுமாா், மந்திரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT