தூத்துக்குடி

தூத்துக்குடி புகா் பகுதியில் இன்று மின்தடை

26th Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி புகா் பகுதிகளில் புதன்கிழமை (பிப். 26) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகர செயற்பொறியாளா் சி. விஜய சங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (பிப். 26) நடைபெறுகிறது. அன்றையதினம் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சிப்காட் வளாகம், ராஜீவ்நகா், மில்லா்புரம் பகுதி, மடத்தூா், தபால் தந்தி ஊழியா் குடியிருப்புகள், ராஜகோபால் நகா், 3 ஆவது மைல், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ குடோன் பகுதி, நிகிலேசன் நகா், இ.பி. காலனி, டைமன்ட் காலனி, மதுரை புறவழிச்சாலை, ஏழுமலையான் நகா், ஆசிரியா் காலனி, சில்வா்புரம், பசும்பொன் நகா், கதிா்வேல்நகா், தேவகிநகா், கிருபை நகா், பால்பாண்டிநகா், அசோக்நகா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT