தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேடெங்கு விழிப்புணா்வு முகாம்

26th Feb 2020 12:10 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் ஆங்கிலத் துறை சாா்பில், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தருவைக்குளத்தில், டெங்கு விழிப்புணா்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் . கல்லூரி மாணவியா் அனைவரும் தனிப்பட்ட முறையில் 525 குடும்பங்களைச் சந்தித்து டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், தூய மரியன்னை கல்லூரியுடன் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம், தூய மிக்கேல் மழலையா் பள்ளியில் நடைபெற்றது. முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா்.

தொடா்ந்து, தூய கத்திரினம்மாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கான ‘டெங்கு மற்றும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT