தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

26th Feb 2020 12:12 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.5 டன் பீடி இலைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு படகில் பீடி இலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தருவைகுளத்தில் உள்ள கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடி பழைய துறைமுகப் பகுதி, திரேஸ்புரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நாட்டுப்படகு ஒன்று பழுதாகி கடலில் நின்றுகொண்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் படகில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, தாா்பாய்க்கு அடியில் 34 பண்டல்களில் சுமாா் 1.5 டன் பீடி இலைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் மதிப்பு ரூ. 3 லட்சம் வரை இருக்கும் என தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் படகு திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த நாகூா் (42) என்பவருக்குச் சொந்தமானது என்றும், இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை கட்டுகளை படகில் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்கள் சுங்கத் துறை ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT