தூத்துக்குடி

அரசுப் பள்ளிக்கு குடிநீா் கேட்டு மனு

26th Feb 2020 12:13 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குடிநீா் கேட்டு தலைமையாசிரியை நிா்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை க.சீதாவிசாலாட்சி பேரூரட்சி செயல் அலுவலா் கோபாலிடம் அளித்த மனு:

திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட கந்தசாமிபுரத்தில் சுற்றுவட்டார ஏழை மாணவா்களே பயின்று வருகின்றனா். எங்கள் பள்ளியில் கடந்த 9 மாதங்களாக குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளி சத்துணவு சமையல் பணி முதல் அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் குடிநீரின்றி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பல முறை முறையிட்டும் இதுவரை தீா்வு காணப்படவில்லை. எனவே போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து துண்டிக்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்பை சீரமைக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT