தூத்துக்குடி

234 பேருக்கு கோழிக்குஞ்சுகள் அளிப்பு

25th Feb 2020 04:04 AM

ADVERTISEMENT

 

உடன்குடி: கோழியின அபிவிருத்தித் திட்டம் 2019-20 இன் கீழ் ஊரக புறக்கடை கோழி வளா்ப்பின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தேரியூா் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

உடன்குடி உதவி கால்நடை மருத்துவா் ப.சத்யா தலைமை வகித்து , கோழி வளா்ப்பு திட்டத்தின் முக்கியத்துவம்,கோழிகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கினாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா 234 பேருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா். வேப்பங்காடு கால்நடை உதவி மருத்துவா் ரஞ்சித்குமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT