தூத்துக்குடி

மூக்குப்பீறியில் தமிழ்மன்றக் கூட்டம்

25th Feb 2020 04:07 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்றக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமிழ் பணியாளா் தேவதாசன் ஞானராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியா் விவின் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் அய்யாக்குட்டி ‘தமிழா்களின் வரலாறும்- நாகரிகமும்’ என்ற தலைப்பில்

பேசினாா். கவிஞா்கள் வீரபாலாஜி, விஜய் ஆகியோா் கவிதை வாசித்தனா். ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா் சுடலைமுத்து, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி தாளாளா் செல்வின், நூலக வாசகா் வட்டத் தலைவா் கண்ணன், தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். தமிழ்ப் பணியாளா் மோசஸ் தயான் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT