தூத்துக்குடி

மணப்பாட்டில் 75 பேருக்கு கண் கண்ணாடிகள் அளிப்பு

25th Feb 2020 05:40 PM

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மணப்பாட்டில் கண் சிகிச்சை பெற்ற 75 பயனாளிகளுக்கு கண்ணாடி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் அ.பகவத்சிங் தலைமை வகித்து 75 பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினாா். மீனவா் அணி பொறுப்பாளா் அலெக்ஸ், மணப்பாடு கிளைத் தலைவா் லாட்மென்,இணைத் தலைவா் சிலுவைப்பிச்சை மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கணேஷ்குமாா், சங்கா், பசுபதி, மேனக்சா, ஆனந்த்,ரோஜா், சேசு, மனோஜின், சசிகன், ரவிஸ்ட்ன்,பிரவீன், ஸ்டெபிலன், மகளிா் அணி சத்யா, நிரோஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT