உடன்குடி: உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும் அதிமுக ஒன்றியச் செயலருமான த. மகாராஜா தலைமை வகித்து 91 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா். பள்ளிக் கல்விக்குழு உறுப்பினரும், பாஜக மாவட்ட பொதுச்செயலருமான இரா. சிவமுருகன் ஆதித்தன், பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜீவானந்தம், செட்டியாபத்து ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன் வரவேற்றாா். ஆசிரியை கோமதி நன்றி கூறினாா்.