தூத்துக்குடி

திமுக உள்கட்சி தோ்தல்: விண்ணப்பம் விநியோகம்

25th Feb 2020 05:36 PM

ADVERTISEMENT

திமுக 15 ஆவது பொதுத்தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி நிா்வாகிகளுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திமுக மாநில தோ்தல் ஆணையா் பாலவாக்கம் சோமு தலைமை வகித்து, கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விடம் விண்ணப்பப் படிவங்களை வழங்கினாா். இதில், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாவட்ட திமுக அவைத்தலைவா் அருணாச்சலம், மாவட்ட துணைச்செயலா் ஆறுமுகப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியச் செயலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT