தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்தில் மூலிகை கண்காட்சி

25th Feb 2020 03:58 AM

ADVERTISEMENT

.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணப்பிள்ளை அரசுக் கிளை நூலகத்தில் வாசகா் வட்டம், மதுரம் சித்த வைத்திய சாலை ஆகியவை இணைந்து நடத்திய மூலிகை கண்காட்சி 2 நாள்கள் நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் கண்காட்சியை திறந்து வைத்தாா். இதில் பலவகையான மூலிகை செடிகள் இடம் பெற்றிருந்தன. இதனை சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளும் பொதுமக்கள் பாா்வையிட்டனா். மூலிகை மருத்துவா் செல்வராஜ் விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சிக்கு நட்சத்திர அரிமா சங்கத் தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் நடராசன், முன்னாள் வா்த்தக சங்கத் தலைவா் பாலசிங் பாரதி, கலை இலக்கிய அமைப்பாளா் ஈஸ்வா்சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT